சாந்திக்கு 15 லட்சம் பரிசு - கருணாநிதி வழங்கினார்..
18 டிசம்பர் 2006
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை சாந்திக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கினார்.
தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றதையடுத்து அவருக்கு தமிழக அரசு சார்பில் 15 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சாந்திக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையில் அவர் தோல்வியடைந்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இன்று முதலமைச்சர் கருணாநிதி அவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாந்திக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் கருணாநிதி வழங்கினார். தங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாததால் தங்களது மகள் சாந்தி பதக்கம் வென்றதை பார்க்க இயலவில்லை என சாந்தியின் பெற்றோர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிராண்ட் மாஸ்டர் சசிகிரண் கிருஷ்ணன், நீளம் தாண்டும் வீராங்கணை அஞ்சு ஜார்ஜ் மற்றும் ஸ்குவாஷ் வீரர் சவ்ரவ் கோசல் ஆகியோருக்கு முறையே தலா ரூ 20 லட்சம், ரூ.15 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சம் ஆகியவற்றுக்கான காசோலைகளையும் அவர் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மொய்தீன் கான், விளையாட்டுத் துறை செயலர் அம்பேத்கர் ராஜ்குமர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றியுடன்
டெய்ல் பீஸ்: திறமைக்கு வறுமை தடை போட முடியாது என்பதை சகோதரி சாந்தி நிரூபித்து விட்டார். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுப் பொய்ப்பிக்கப்பட்டு அவர் மீதுள்ள கலங்கம் தீர நாம் மனதார வாழ்த்துவோமாக.
வரலாற்றில் சாந்தி.
Subscribe to:
Post Comments (Atom)


2 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
ippadip patta talents ellam niraya irukkum nam naattil govt ookam miga miga mukkiyam. avargalukku pala kodi Funds odukki munnaera vaithtaal naamum matra naadaip pol sirandhu vilangalaam. thanks to karu for sponsoring shanthi.
வருகைக்கு நன்றி கிட்டு.
நிச்சயமாக நம் நாட்டில் திறமை மிக்கோர் அதிகம் என்பதற்கு சாந்தி ஒரு உதாரணம். அவருடைய குடும்ப சூழ்நிலையப் பாருங்கள் கலர் டிவி கூட அவர்கள் வீட்டில் இல்லை. இதுபோல் எத்தனையோ திறமை மிக்கோரின் திறமைகள் வறுமையின் காரணமாக வெளிவராமலேயே போய் விடுகின்றது. அரசாங்கம் எப்படி நம்மில் திறமை மிக்கோரை எப்படி வெளிக் கொணர்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.
Post a Comment