ஏனிந்த கவலை!..

வருகின்ற 30 அல்லது 31ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? கீழே படியுங்கள்.

என்னிடம் என்னுடைய மேளாலர் (ஆங்கிலேயர்) துருவி துருவி பக்ரீத் பண்டிகையின் தேதியைக் கேட்டார் நானும் மூன்று அல்லது நான்கு முறை 30 அல்லது 31ஆம் தேதி என்று கூறினேன். அவர் முகம் வாடியிருந்தது, அவர் முகத்தின் மாற்றம் எனக்கு வருத்தத்தைத் தந்தது ஆனால் காரணம் புரியவில்லை அவர் அவருடைய பாசையில் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார். நான் சிறிது நேரம் சென்றதும் அவரிடம் "என்ன ஆச்சு ஒரு மாதிரியாக இருக்கின்றீர்களே?" என்று கேட்டேன் அவர் சே! பக்ரீத் 31ஆம் தேதி வருகிறதே என்று கூறினார். எனக்கு வியப்பாக இருந்த்தது இவருக்கு 31ஆம் தேதி பக்ரீத் வந்தால் என்ன. அப்பொழுதான் எனக்கு காரணம் புரிந்தது இங்கு துபாயில் முஸ்லிம்களின் பண்டிகை நாட்களில் ஹோட்டல்களில் "தண்ணி" சப்ளை கிடையாது. 31ஆம் தேதி பக்ரீத் வந்தால் "New year celebration"-க்கு "தண்ணி" கிடைக்காது. நான் அவரிடம் 31ஆம் தேதி தண்ணி அடிக்க முடியாது என்றுதானே கவலைப்படுகிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு ஆம் "New year celebration" -ஐ தண்ணியடிக்காமல் எப்படிக்கொண்டாட முடியும் என்று கேட்டார். உண்மைதான் என்ன செய்ய. நான் உடனே 30ஆம் தேதியும் பக்ரீத் வரலாம் அதற்கு அறிகுறிகள் உள்ளன என்று அவர் மனதைத் தேற்றினேன்.




பாருங்கள் கஷ்டம், கவலை மனிதனுக்கு எப்படியெல்லாம் வருகிறது!.




0 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்: