"அப்பா அப்பாதான்" இதயம் உருகும் நினைவுகள்..

வயதுக்கேற்ப மாறுபடும் தன் தந்தையைக்குறித்த எண்ணங்கள்.


வயது நான்கில்..

அப்பா is Great



ஆறில்..

என் அப்பா எல்லாம் அறிந்தவர்!




பத்தில்..

அப்பா நல்லவர்தான் ஆனால் கோபக்காரராக இருக்கிறார், ஏதோ நண்பர்களின் தந்தையைவிட கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறார்..





பண்ணிரெண்டில்..

அப்பா, நான் குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு நல்லவராக இருந்தார்..



16 வயதினிலே!

ஐயோ! என் அப்பா தற்காலத்திற்கு தகுந்தவராகவும் இல்லை எதையும் அறிந்தவராகவும் இல்லை..



18 வயது வந்து!

அப்பாவுடன் ஒத்துப்போவது மிக கடினம்.., அவருடைய கூடும் அசாதரணச் சிந்தையில்.



25-ல்!


எதையெடுத்தாலும் எதிர்த்துப் பேசுவதே இந்தாளுக்கு வேலையாகிவிட்டது, எப்பதான் உலகத்தைப்பற்றி புரிந்து கொள்ளுமோ தெரியவில்லை?

வந்ததே

30

ஐயோ! ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு என்ன பாடு அம்மா!,

நான் சிறிவனாக இருந்த பொழுது அப்பாவிற்கு எவ்வளவு பயப்படுவேன்.


@40

எவ்வளவு ஒழுக்கத்துடன் என் தந்தை என்னை வளர்த்துள்ளார், அவர் இளையதலைமுறை கையாண்டவிதம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது!.

At 45

எப்படித்தான் என்னை வளர்த்தார் என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.


@ 50

என்னையும் என் சகோதரியையும் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறார் என்பது, என் ஒரு மகனை வைத்துக்கொண்டு நான் படும்பாடு உணர்த்துகிறது.


At 55

ஐயோ தந்தையே! எவ்வளவு தொலநோக்கு சிந்தனை? எவ்வளவு தூரம் நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு எங்களுக்காக செய்துள்ளீர்கள்!
இந்த தள்ளாத வயதிலும் உங்களால் காரியங்களை கட்டுப்படுத்த முடிகிறதே!,
நீங்கள் தனித்தன்மை வாய்ந்த அப்பாதான்.

நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாதீர்கள் இதை தீர்மானிப்பதற்கு.

என் அப்பா is Great
காலத்திலேயே புரிந்து கொள்ளுங்கள்!

1 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:

said...

test..