தள்ளாடி தள்ளாடி 85 வயது மதிக்கத்தக்க வயாதான மூதாட்டி ஒருவர் சென்னையில் சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் இரயில் தனது பசியைப்போக்க கையேந்திக் கொண்டிருந்தார், என்ன ஆச்சரியம் அந்த கம்பார்ட்மென்டில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமானோர் பயணம் செய்தனர் ஆனால் ஒருவர் கூட அவருக்கு உதவுவதற்கு முன் வரவில்லை, தாயின் மடியில் இருந்த குழந்தை "அம்மா இந்தப் பாட்டிக்கு இந்த பிஸ்கட்டைக் கொடுக்கவா?" என்று கேட்டதற்கு அம்மா அந்தக் குழந்தையைக் கடிந்து பிஞ்சுக் குழந்தையின் பிஞ்சு இதயத்தில் நஞ்சை ஊட்டினார், பாவம் குழந்தை.
மேலும் நான் என்னிடம் இருந்த ஐந்து ரூபாய் காயினை அவருக்குக் கொடுத்ததற்க்காக என்னை அருகில் இருந்தவர்கள் ஏளனமாகப்பார்த்தனர்.
கையும் காலும் நன்றாக இருந்தும் உழைக்காமல் பிச்சை எடுப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் சோம்பேறிகளுக்கு உதவக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வாழவே வழியின்றி தன் அன்றாடத்தேவைகளுக்காக கையேந்தும் ஒரு வயோதிகரிடமுமா இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கேளிக்கைகளுக்கும் இன்ன பிற அநாவசிய வீண் விரயங்களுக்கும் பணத்தை வாரியிறைக்கும் நாம் நிற்கதியற்று நிற்போருக்கு கொடுப்பதால் நாம் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.
என்ன! அந்த வண்டியில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பசியை உணர்ந்தவர்கள் "மாறும் மனிதனின் உணர்வுகளை" நினைத்து நெஞ்சம் கனக்கிறது.
மாறும் மனித உணர்வுகள்!
Subscribe to:
Post Comments (Atom)


0 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
Post a Comment