மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன்.. ஹா...ஹா..ஹா

சமீபத்தில் பாலாபாரதியின் இந்தப்பதிவும், அவர் லிங்க் கொடுத்திருந்த படமும் இதயத்தில் ரணத்தை ஏற்படுத்தி விட்டது. எவ்வளவு கொடூரமாக ஒரு பெண் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டிருக்கிறார்.

படங்கள் மனிதனின் வெறி எதையும் செய்யத் தயங்காது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. என்ன ஒரு கொடூரம்!



நாகரித்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் எங்கோ போய் விட்ட நாம் இது போன்ற நிகழ்ச்சியினால் வெட்கித்தலை குனியாமல் இருக்க முடியவில்லை.

மனிதன் என்ற படத்தில் "குரங்கிலிருந்து பிறந்தானா? குரங்கை மனிதன் பெற்றானா?" என்ற வரி ஒன்று வரும். தயவு செய்து குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறாதீர்கள்.

"பாவம் அது குரங்கிற்குத்தான் கேவலம்"

0 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்: