ஒரு வகையில் நடிகர்கள் கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள், வயது எவ்வளவுதானானாலும் இளைய பெண்களுடன் "அதிரடிதான் மச்சான் மச்சான் மாச்சானே", "அர்ச்சுனா அர்ச்சுனா அம்புவிடும் அர்ச்சுனா" etc... என்று ஆடிப்பாடி கும்மாளம் போடுகின்றனர், பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகின்றனர் இதில் ரஜினி படையப்பாவில் ஒருபடி மேலே போய் சட்டையெல்லாம் களட்டி விட்டு தனது கட்டுடலை(?!) காட்டுவதும் . மேலும் அதே ரஜினி சிவாஜியில் துரத்தி துரத்தி தனது கலரையெல்லாம் மாற்றி காதல் பண்ணுவதும்தான் கொடுமையிலும் கொடுமை, விவேக் இவரின் மாமாவாக மாறியது, என்னத்தைச் சொல்ல காலக் கொடுமையை.
இளம் நடிகைகள் என்ன பாவம் செய்தார்களோ வயதான தாத்தாக்களுடனெல்லாம் நடிக்க வேண்டியுள்ளது.
விஜயகாந்தின் கூத்துக்களும் சலைத்தைவை அல்ல, இவர் மிக நல்லவராக, பெண்களின் வாடையே பிடிக்காதவராக இருப்பார் இவரிடம் என்ன ஈர்ப்போ ஹீரோயின் இவரைத் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும்.
விஜயகாந்தின் கூத்துக்களும் சலைத்தைவை அல்ல, இவர் மிக நல்லவராக, பெண்களின் வாடையே பிடிக்காதவராக இருப்பார் இவரிடம் என்ன ஈர்ப்போ ஹீரோயின் இவரைத் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும்.
"நீங்க மட்டுந்தேன் பண்ணுவீங்களோ, நாங்களும் பண்ணுவோம்ல" இது வேறு யாருமல்ல "ஏ டண்டணக்கா ஏ டணக்குணக்கா" நம்ம விஜய டி ஆர் தான் மும்தாஜுடன் சமீபத்தில் போட்ட வீராசாமி குத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
நடிகர்களுக்கு வயது வரம்பென்பதே இல்லை, ஆனால் நடிகைகளுக்கு, கீழே "ஓரங்கட்டப்பட்ட ஆன்டிக்களின்" படங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.





4 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:
ஆண்டிகள் சூப்பரோ சூப்பர்.
Other than Sonali, all are not Aunties... they are paaties.
ஏனுங்கோ, சிமி,தனுஜா,ராகி இவர்கள் புகைப்படம் கிடைக்கவில்லையா
அப்பாலே தமிழை புறக்கணிக்கலாமா ?
M Poovannan said...
//ஏனுங்கோ, சிமி,தனுஜா,ராகி இவர்கள் புகைப்படம் கிடைக்கவில்லையா//
கெடச்சிருந்தா போட்டிருப்போம்ல.
//அப்பாலே தமிழை புறக்கணிக்கலாமா ?//
என்னங்க நீங்க நம்மல வம்புல மாட்டி வுடுறதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா?.
Post a Comment