பெண்(சகோதரி)கள் ஜாக்கிரதை :(((

சில நேரங்களில் சிலரின் ரசனை எவ்வளவு கீழ்த்தரமாக மாறுகிறது.

சமீபத்தில் என்னுடன் பணி புரியும் இரு மலையாளிகள் ஒரு வீடியோ கிளிப்-ஐ ப்ளூ டூத் -ல் தங்களுக்கு பரிமாரிக் கொண்டிருந்தனர், நினைப்பதற்கே அருவருப்பாக உள்ள ஒன்று அந்த கிளிப்பில் இருந்தது, இன்று சாதரணமாக பெரும்பாலான இளைஞர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ப்ளூ fபில்ம் இல்லை அது.

பெண்களின் அங்கங்களை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கேமராக்கள் கழிவறை வரை சென்றிருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

அது ஏதோ ஒரு ஹாஸ்பிடல்லாகத்தான் இருக்கவேண்டும். ஒரு மிருகம் பெண்களின் கழிவறையின் மேல் பகுதியில் கேமராவைப் பொருத்திவிட்டுச் சென்று விட்டது அதில் அன்று இயற்கைத்தேவையைப் பூர்த்தி செய்ய வந்த அனைவரும் (அந்த கேமராவில்) படம் பிடிக்கப்பட்டு விட்டனர் அவை இன்று சர்வ சாதரணமாக ப்ளூ டூத்தில் பரிமாரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எது எதெற்க்கெல்லாம் பெண்கள் பயப்பட வேண்டியிருக்கிறது இனி பொதுக் கழிவரையை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் அதை முழுவதுமாக சோதனை செய்து விட்டுத்தான் பயன் படுத்த வேண்டும் போலிருக்கிறது. என்ன ஒரு கொடுமை.

என்னதான் நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் பெண்களை இன்றும் போகப் பொருளாகத்தான் உலகம் பார்க்கிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் இல்லாமல் வேறென்ன.

இது பெண் இனத்தை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் பலமான தாக்குதல், நல்ல மனம் உள்ள யாரலும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு அவமானகரமான வரலாற்றுக் கருப்புப் புள்ளி.

20 மறு மொழி பகிர்ந்திருக்கிறார்கள்:

Anonymous said...

இப்படியுமா நடந்து கொள்ளுங்கள் மிருகங்கள்?

:((((

said...

becareful all girls

said...

ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.

said...

//Anonymous said...
இப்படியுமா நடந்து கொள்ளுங்கள் மிருகங்கள்?//

உங்கள் வருத்தத்திற்கு நன்றி அனானி ஐயா.

//ஜிம்ஷா said...
becareful all girls//

உங்கள் அறிவுரைக்கு நன்றி ஜிம்ஷா அவர்களே.

//rapp said...
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க.//

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி rapp sir.

said...

வெட்கக்கேடு

said...

எத்தனையோ கோடானுகோடி மக்களில் இப்படியானர்களும் இருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிதொன்றே. தொழிநுட்பம் வளர்ந்துவிட்டதால், தகவல்தொடர்புகள் விரைவடைந்துவிட்டதால் உடனடியாக அறிகிறோம். மற்றும்படி இது எல்லாக் காலங்களிலும் இதனையொத்த செய்கைகள் நடந்தவண்ணமே இருக்கின்றன்.

நாம்தான் அவதானமாக இருக்கவேண்டும். நல்ல பதிவு.

மதுவதனன் மௌ.

said...

இன்று தான் இதைப்பற்றி என் ப்ளாக்கில் எழுதினேன். அதற்குள் இப்படி ஒரு வருத்தமான பதிவு. :(

இது சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவது மாதிரி. சிலர் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்து, வெளி இடங்களில் குப்பை போடுவார்கள். வெளியே போடும் குப்பையால் வளரும் கிருமிகள் வீட்டில் உள்ளவர்கள் தாக்க அதிக காலம் ஆகாது.

இவர்களுடைய வலையில் இவர்களே விழுவார்கள். ஒரு நாள் இவர்களுடைய குடும்பத்து பெண்களின் அந்தரங்க தருணங்களும் இதே போல இண்டர்நெட்டில் உலவத்தான் போகிறது. Purely based on chances, bad habits spreads like wildfire.

said...

சொல்ல மறந்துவிட்டேன். ரொம்ப அவசியமான பதிவு, நன்றி ஸ்யீத்.

said...

//மங்களூர் சிவா said...
வெட்கக்கேடு//

வருத்தமான கருத்துக்கு நன்றி சிவா சார்.

said...

//மதுவதனன் மௌ. said...
நாம்தான் அவதானமாக இருக்கவேண்டும். நல்ல பதிவு.//

அறிவுரைக்கு நன்றி மதுவதனன் மௌ சார்.

said...

//கயல்விழி said...
ஒரு நாள் இவர்களுடைய குடும்பத்து பெண்களின் அந்தரங்க தருணங்களும் இதே போல இண்டர்நெட்டில் உலவத்தான் போகிறது.//

சாபம் வேண்டாம் கயல்விழி அவர்களே. உங்களின் கோபம் நியாமானதே ஆனால் இது போன்ற மிருகங்கள் செய்யும் இழிவான செயல்களுக்கு இவர்களின் வீட்டுப் பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்.

அவர்களும் பெண்கள்தானே.

//சொல்ல மறந்துவிட்டேன். ரொம்ப அவசியமான பதிவு, நன்றி ஸ்யீத்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி அவர்களே.

said...

very good post...

female must vigilant about this...

--Mastan

said...

"கொலையாளிய நம்பினாலும் மலையாளிய நம்பாதே" என்பது எவ்வளவு உண்மை என இவர்களுடன் நெருங்கிப் பழகிப் பார்த்தால்தான் தெரியும்.

said...

//Mastan said...
very good post...
--Mastan//

Thank you very much Mr. Mastan.

//female must vigilant about this...//

Vigilant is possible. But see our guys brought our ladies to be watchful in washroom also. It’s disgraceful.

said...

//புதுகைச் சாரல் said...

"கொலையாளிய நம்பினாலும் மலையாளிய நம்பாதே"//

புதுகைச்சாரல் அவர்களே!

இது மலையாளிகள்தான் செய்திருக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் செல்போன்களிலிருந்து Fஆர்வேர்D செய்து கொண்டிருந்தார்கள் அவ்வளே. இது யார் செய்திருப்பினும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதே.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

மிகக் கேவலமான விடயம் ஸயீத். இது பற்றி நான் இங்கும் http://rishanshareef.blogspot.com/2008/01/blog-post.html பதிவிட்டிருக்கிறேண். நேரம் கிடைக்கும் போது பாருங்கள் நண்பரே :)

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
மிகக் கேவலமான விடயம் ஸயீத். இது பற்றி நான் இங்கும் http://rishanshareef.blogspot.com/2008/01/blog-post.html பதிவிட்டிருக்கிறேண். நேரம் கிடைக்கும் போது பாருங்கள் நண்பரே :)//

வருகைக்கும், சுட்டிக்கும் மற்றும் பெண்களுக்கான அறிவுரைக்கும் நன்றி.

said...

மிகவும் கேவலமான விஷயம்.

இப்படி செய்பவரை தண்டித்தால் போதாது, 'துண்டித்து' விடவேண்டும்.

said...

//ச்சின்னப் பையன் said...
மிகவும் கேவலமான விஷயம்.

இப்படி செய்பவரை தண்டித்தால் போதாது, 'துண்டித்து' விடவேண்டும்.//

துண்டிப்பதைவிட இதையெல்லாம் ரசிக்கும் கண்களைத் தோண்டிவிட வேண்டும்.

தண்டனை ஐடியாவிற்கு நன்றி ச்சின்னப் பையன்.

said...

இது போன்ற பொருக்கிகளைப் பிடித்து நாயை அடிப்பது போல் அடிக்க வேண்டும்.