ஒரு வகையில் நடிகர்கள் கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள், வயது எவ்வளவுதானானாலும் இளைய பெண்களுடன் "அதிரடிதான் மச்சான் மச்சான் மாச்சானே", "அர்ச்சுனா அர்ச்சுனா அம்புவிடும் அர்ச்சுனா" etc... என்று ஆடிப்பாடி கும்மாளம் போடுகின்றனர், பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகின்றனர் இதில் ரஜினி படையப்பாவில் ஒருபடி மேலே போய் சட்டையெல்லாம் களட்டி விட்டு தனது கட்டுடலை(?!) காட்டுவதும் . மேலும் அதே ரஜினி சிவாஜியில் துரத்தி துரத்தி தனது கலரையெல்லாம் மாற்றி காதல் பண்ணுவதும்தான் கொடுமையிலும் கொடுமை, விவேக் இவரின் மாமாவாக மாறியது, என்னத்தைச் சொல்ல காலக் கொடுமையை.
விஜயகாந்தின் கூத்துக்களும் சலைத்தைவை அல்ல, இவர் மிக நல்லவராக, பெண்களின் வாடையே பிடிக்காதவராக இருப்பார் இவரிடம் என்ன ஈர்ப்போ ஹீரோயின் இவரைத் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும்.




