எத்தனையோ பேர் குசேலன் வெளியனவுடன் தமிழ்மணமே கதிகலங்கப்போகிறது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர், இன்னும் சிலர் இந்தத் தாக்குதலை எப்படி சமாளிப்பது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர் என்றால் மிகையாகாது.
ஆனால் நிலமை என்ன இது வரை எத்தனையோ வலைப்பூக்களை மேய்ந்தும் வயிறு வீங்கியதுதான் மிச்சம்.
குசேலன் பற்றி வந்த அனத்துப் பதிவுகளுமே நையாண்டியாகவே இருந்தது ஆனால் இதைத்தவிர.
ஆனால் தசவாதரம் வெளியானபோது தமிழ்மணமே "தசவாதர" அபிஷேகத்தால் நிரம்பி வழிந்தது என்றால் மிகையாகாது.
எனவே............
"தசவாதரத்தின் முன் குசேலன் ஒன்னுமில்லை" (அப்பாடா தலைப்புக்கு மேட்டர் தேத்தியாச்சு).
தசவாதரத்திற்கு முன் குசேலன் ஒன்னுமில்லை!
"Wanted" - தி Bளண்டர் (ஹாலிவுட்)
அலுவலகத்தில் அக்கவுண்டன்ட்-ஆக பணிபுரியும் தான் வாழும் வாழ்க்கையில் பிடிப்பில்லாத ஹீரோ (James McAvoy), அவருக்கு ஒரு கேள் fரண்D அவரை அயாராது தொல்லை செய்யும் ஹாலிவுட் பிந்துகோஸ் மற்றும் அலுவலக ப்ளே பாய் நண்பன் என்று படம் (நம் தமிழ் சினிமாக்களிலெல்லாம் ஹீரோ பேக்ரவுண்ட்ல் இருந்து தனது கதையை கூறுவாரே) அதே fஆர்முலாவில் துவங்குகிறது.

கதையில் "X (என்று குறியிடப்படப் போகின்ற)" வர் தீடீரென்று தோன்றி ஒரு அலுவலகத்தில் நுழைகிறார், அங்கு பணிபுரியும் பெண்ணைக் குறிவைக்கும் துப்பாக்கி கண் இமைக்கும் நேரத்தில் அவரைப் பதம் பாக்கிறது, ("X" என்று குறியிடப்படப் போகின்ற)" வர் ஒட்டம் எடுக்கிறார் துப்பாக்கியில் இருந்து தப்பிப்பதற்கு என்று நினைத்தால் நாம்தான் முட்டாளாவோம், ஓடியவர் அதிவேகமாக திரும்பி ஓடி வந்து கிட்டத்தட்ட ஐம்பது மாடிகளுக்கும் மேலாக உள்ள கட்டிடத்திலிருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு, அந்தரத்தில் பாயும் போதே எதிரிகளை சுட்டு வீழ்த்தி அடுத்த மாடியை அடைகிறார் (தோரயமாக இரண்டு மாடிகளுக்கும் உள்ள இடைவெளி கீழே ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் வைத்துப்பார்த்தால் இரண்டு வழிப்பாதையின் தூரம் இருக்கும்), அனைவரயும் கொன்றுவிட்டு நிற்கும் அவர் பின்னாலிருந்து எத்தனையோ மைல்களைத் தாண்டிவரும் துப்பாக்கி குண்டினால் பின்னந்தலையில் குண்டடி பட்டு இறக்கிறார்.
கதை என்னவென்றால் தனது தந்தை இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஹீரோ (James McAvoy) வை ஒரு தருணத்தில் ஆன்ஜலினா ஜூலி யாரோ ஒருவரிடமிருந்து காப்பாற்றி தனது தலைவ(Morgan Freeman)னிடம் கூட்டிச் செல்கிறார் அங்கு, கோடிப் பேரில் ஒருவருக்கே உள்ள திறமை உன்னிடம் உள்ளது என்று தலைவன் கூறி ஈ யின் இறக்கையை கரெக்ட்டாக சுடும்படி பணிக்கப்படுகிறார். ஹீரோவும் துப்பாக்கியை எடுத்து ஈ யின் இறக்கையை மிகச் சரியாக சுட்டு வீழ்துகிறார்(?!), வழக்கமான சினிமா பாணியில் அந்தக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் (Morgan Freeman) தலைவன் பார்த்தாயா உன் திறமையை என்று தட்டிக் கொடுக்கிறார்.
என்ன எதுக்கென்றே தெரியவில்லை ஹீரோவை ஆளாளுக்கு அடிக்கிறார்கள் நம்புங்கள் அது ஹீரோவுக்குக் கொடுக்கப்படும் பயிற்சியாம்.
("ஆயிரம் பேர் நல்லாயிருக்கனும்னா ஒரு கெட்டவனைக் கொல்றது தப்பே இல்லை" எனவே) கெட்டவர்கள் அழிக்கப் பட வேண்டும் என்பது ஹீரோவின் தந்தை ஆசைப்பட்டதாம் இதைக்காரணம் காட்டி, ஒருவனைக் கொல்லும் பணி ஹீரோவிடம் அந்தக் கூட்டத்தால் கொடுக்கப்படுகிறது, ஹீரோவும் துப்பாக்கிச் சண்டையெல்லாம் போட்டு மிகவும் சிரமப்பட்டு இறுதியில் அவ(கெட்டவ)ரைச் சுடுகிறார். குண்டடிபட்டிருக்கும் மனிதர் விபத்துக்குள்ளான இரயிலிருந்து கீழே அதலபாதாளத்தில் விழப்போகும் ஹீரோவைக் காப்பாறியதோடு மட்டுமின்றி அவரின் தந்தை தான் தான் என்று கூறி கதைக்குத் திருப்புமுனை(?)யை எற்படுத்தி வைத்து இறக்கிறார். பிறகென்ன வெகுண்டெழுந்த ஹீரோ எதேதோ ஐடியாக்களை பண்ணி அந்தக்கூட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தக் கூட்டத்திடம் நிராயுதபாணியாக துப்பாக்கி முனையில் (கோபப்பார்வை பார்த்தபடி) நிற்கும் அவரை அன் ஜலினாஜூலி காப்பாற்றி தானும் குண்டடி பட்டு இறக்கிறார்.
ஹீரோவின் நடிப்புமாத்திரம் சூப்பர் என்று சொல்லலாம், மத்தபடி வெறும் Fantsy, ஹீரோவை ஏமாற்றி தன் காதலியை தன் வசமாக்கும் ப்ளே பாய் நண்பன், அவரின் காதலியை வெறுப்பேற்றுவதற்க்காக அன் ஜலினா ஜூலி ஹீரோவுக்குக் கொடுக்கும் லிப்ஸ் கிஸ், இரயில் விபத்து இவையெல்லாம் ஹாலிவுட்டுக்கு ஒன்றும் புதிதில்லையே.
இது Mark Millar மற்றும் JG Jones காமிக்ஸ் கதை, ஆகையால் துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டா நேராகத்தான் போகும் என்பது நியதி ஆனால் வலைந்தெல்லாம் சென்று தாக்கும் என்பது இந்தப் படத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம், பண்டய காவியங்களைப் படமாக்குகையில் வில்லும் வில்லும் சந்தித்து இரு வில்லும் முறிந்து போகும், இங்கே துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வரும் தோட்டாக்கள் ஒன்றுக்கொன்று சந்தித்து இரண்டு தோட்டாக்களும் நெலிந்து போகிறது.
கடைசி காட்சியில் ஹீரோவின்(?) பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்து அதிர்ச்சியைக் கொடுக்கிறார் Morgan Freeman (அவர் அன் ஜாலினாவின் குண்டடியிலிருந்து எப்படித்தப்பித்தார் என்றெல்லாம் கேட்கக்கூடாது), ஆனால் திரும்பினால் அது ஹீரோ அல்ல, வேறொருவர் உடனே குனிந்து கீழே பார்க்கிறார் அவரின் காலடியின் கீழ் "X" என்ற குறி போடப்பட்டிருக்கிறது, அப்படியானால்??? எத்தனையோ மைல்களைத் தாண்டிவரும் துப்பாக்கி தோட்டா அவரின் நெற்றியைப் பதம் பார்க்கிறது. சுட்டது யார் அதுதான் "ஹீரோ"
தந்திரமாக மறைக்கப்பட்ட உண்மை. :)
அமெரிக்கர்களுக்கு முன்பே நம் இந்தியன் தான் நிலவில் கால் பதித்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
தந்திரமாக நாசாவினால் பாதிப் படமே வெளியிடப்பட்டது, படத்தில் வட்டமிடப்பட்டுள்ள நிழலைப் பாருங்கள் உண்மை புரியும்.
முழுப்படம் கிழே..

படத்தில் மலையாளத்தில் எழுதியிருப்பட்டிருக்கும் கடையின் பெயர் "சந்திரன் தட்டுக்கடை" யாம், தமிழில் சந்திரன் ஸ்டால் என்று கூறலாம்.
பெண்(சகோதரி)கள் ஜாக்கிரதை :(((
சில நேரங்களில் சிலரின் ரசனை எவ்வளவு கீழ்த்தரமாக மாறுகிறது.
சமீபத்தில் என்னுடன் பணி புரியும் இரு மலையாளிகள் ஒரு வீடியோ கிளிப்-ஐ ப்ளூ டூத் -ல் தங்களுக்கு பரிமாரிக் கொண்டிருந்தனர், நினைப்பதற்கே அருவருப்பாக உள்ள ஒன்று அந்த கிளிப்பில் இருந்தது, இன்று சாதரணமாக பெரும்பாலான இளைஞர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ப்ளூ fபில்ம் இல்லை அது.
பெண்களின் அங்கங்களை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் கேமராக்கள் கழிவறை வரை சென்றிருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
அது ஏதோ ஒரு ஹாஸ்பிடல்லாகத்தான் இருக்கவேண்டும். ஒரு மிருகம் பெண்களின் கழிவறையின் மேல் பகுதியில் கேமராவைப் பொருத்திவிட்டுச் சென்று விட்டது அதில் அன்று இயற்கைத்தேவையைப் பூர்த்தி செய்ய வந்த அனைவரும் (அந்த கேமராவில்) படம் பிடிக்கப்பட்டு விட்டனர் அவை இன்று சர்வ சாதரணமாக ப்ளூ டூத்தில் பரிமாரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எது எதெற்க்கெல்லாம் பெண்கள் பயப்பட வேண்டியிருக்கிறது இனி பொதுக் கழிவரையை பெண்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் அதை முழுவதுமாக சோதனை செய்து விட்டுத்தான் பயன் படுத்த வேண்டும் போலிருக்கிறது. என்ன ஒரு கொடுமை.
என்னதான் நாம் விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் பெண்களை இன்றும் போகப் பொருளாகத்தான் உலகம் பார்க்கிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் இல்லாமல் வேறென்ன.
இது பெண் இனத்தை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் பலமான தாக்குதல், நல்ல மனம் உள்ள யாரலும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு அவமானகரமான வரலாற்றுக் கருப்புப் புள்ளி.

