அன்னை ஜைனப்(ரலி) அவர்களின் திருமணமும் அனானியின் மன வக்கிரமும்.

எத்தனை முறை விளக்கினாலும் விளங்க மறுக்கும் "கோயபல்ஸ்" பரம்பரையினரை என்னவென்று சொல்வது, கேள்விகள் எத்தனையோ விஷயங்களுக்காக கேட்கப்படுகின்றன, அதில் ஒரு வகை விளங்கிக் கொள்ளவோ அல்லது அறிந்து கொள்ளவோ கேட்கப்படுவது இன்னொன்று தவறான ஒரு விஷயத்தை அறியப்படுத்துவதற்க்காக கேட்கப்படுவது.

உண்மைக்குப் புறம்பான ஒரு விஷயத்தை தான் கொண்ட கொள்கையை நிலை நிறுத்துவதற்க்காக சற்றும் சளைக்காமலும் நீதிக்கு சிறிதும் அஞ்சாமலும் அள்ளி எறிவதுதான் அவதூறு என்று அறியப்படுகிறது.

அந்த வகையில் "குரங்கு" என்ற பதிவர் "தினமலரும் முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் பதிவிட்டு அதில் //இதுதான் சான்ஸ் என்று...// வலையுலகைப் புரிந்து கொண்டு வேண்டுகோளும் வைத்திருந்தார். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத அக்னிக்குஞ்சு என்ற அனானி அந்தப்பதிவில் தன் மன வக்கிரத்தை இவ்வாறு வைத்திருந்தது.

//அனானி அக்னிக்குஞ்சு said:
அட அவ்வளவு தூரம் ஏன், குரங்கு ஐயா அவர்களே. ஜைனப்-நபி திருமணத்தின் பின்னனியை பற்றி கொஞ்சம் கேளுங்க அவர்களிடம், அப்பத் தெறியும் உங்களுக்கு மேலும் அவர்களைப் பற்றி.சொந்த மருமகள் குனிந்து வேலை செய்யும் போது தெறிந்த மார்பழகை பார்த்து காமம் தலைக்கேரி அவளையும் தன் மனைவியாக்கிக் கொண்டத் தருதலை கதை தான் அது.அதுல பாருங்க குரங்கு ஐயா அவர்களே, இந்தக் கேவலம் இனி நடக்கக் கூடாதுன்னு அந்த தருதைலையே ஒரு புது சட்டத்தை போட்டுச்சி. அதாவது இனி மேல் பெண்கள் படுதா போடாமல் இருக்கக்கூடாது என்பது தான் அந்த சட்டம்.இப்படி பல கேவலங்களிருக்கு அன்பரே !அனால் இதை விட பல பயங்கரமான கேவலங்கள் இந்து மதத்துல இருக்குது.சமயம் கிடைக்கும் போது பேசுவோம்.சரி நான் அடுத்த கிளைக்கு தாவுரேன்...//

ஐயா அனானி அக்னிக் குஞ்சு!, ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ஜைனப் - நபி (ஸல்) அவர்களின் திருமணம் ஒன்றும் மூடி மறைக்கப்பட்டப்பட்ட வராலாறு அல்லவே அதை முஸ்லிம்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள. ஜைனப் (ரலி) அவர்களின் திருமணம் மற்றுமல்லாது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களுமே திறந்தவெளிப் பல்கலைக்கழகமாக உள்ளது கண்கூடு. உலகத் தலவர்கள் வரிசையில் ஒரு மனிதனின் வாழ்க்கை பதியப்பட்டு அதில் அநேக விஷயங்கள் அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் பின்பற்றுவது முகம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றில் மட்டுமே என்பது மறுக்கவியலா உண்மை.

ஜைனப் (ரலி) மற்றும் நபி (ஸல்) அவர்களின் திருமணத்தை உண்மையிலேயே அறிய ஆர்வமுடையோர்க்கு அபூமுஹை அவர்களின் இந்தப் பதிவு
நிச்சயமாக உதவும், உண்மை எங்கும் மறைந்து போய்விடவும் இல்லை அதை மறைக்கவேண்டிய அவசியமும் இல்லை.

//சொந்த மருமகள் குனிந்து வேலை செய்யும் போது தெறிந்த மார்பழகை பார்த்து காமம் தலைக்கேரி அவளையும் தன் மனைவியாக்கிக் கொண்டத் தருதலை//

எதையேனும் எழுதும் பொழுது எழுதுதுவதைப் பற்றி கொஞ்சமாவது ஞானம் இருக்கவேண்டும்.

சே..சே.. இதையெல்லாம் போய் அனானி அக்னிக்குஞ்சுகளிடம் எதிர்பார்க்கலாமா?.

ஜைனப் (ரலி) அவர்கள் ஸைத் என்பவரின் மனைவி, ஸைத் என்பவர் முகம்மது (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன், இது வரலாற்று உண்மை. இதன் மூலம் சொந்த மருமகள் எனும் வாதம் பொய்யாகி அனானி அக்னிக்குஞ்சின் மன வக்கிரம் வெளிப்படுகிறது.

//குனிந்து வேலை செய்யும் போது தெறிந்த மார்பழகை பார்த்து காமம் தலைக்கேரி அவளையும் தன் மனைவியாக்கிக் கொண்டத் தருதலை//

ம்ம்ம்....அடுத்து.

இந்தக் அவதூறுக்கு நேர்மையான முறையில் விளக்கம் கொடுக்கலாம்தான் ஆனால் அனானி அக்னிக் குஞ்சு போன்றோர்க்காக மட்டும் கீழ்காணும் விளக்கம்.

எம்ப்பா அனானி, ஒருத்தி மார்பழகைப் பார்த்து மயங்கும் ஒருவர் கல்யாணம் பண்ணித்தான் அனுபவிக்க வேண்டுமா?, ஏன் அதற்கு வேறு வழிகளே இல்லையா?.

//இந்தக் கேவலம் இனி நடக்கக் கூடாதுன்னு அந்த தருதைலையே ஒரு புது சட்டத்தை போட்டுச்சி//

இப்படி சட்டம் போடும் நிலையில் இருக்கும் ஒருத்தர் கல்யாணம் பண்ணித்தான் அனுபவிக்க வேண்டும் என்று எழுதுவது இருக்கிறதே யப்பா உலகமகா காமெடிடா சாமி. ஆமா தெரியாமல்தான் கேட்கிறேன் எதாவது இஸ்லாத்தின் பெயரால் எவனோ எழுதியதை வந்து வாந்தியெடுக்கும் முன்பு இதையெல்லாம் யோசிப்பதே கிடையாதா? இஸ்லாம் என்று வந்துவிட்டால் உங்களின் யோசிக்கும் திறன் பழுதடைந்து விடுகிறதா என்ன?.

சரி! ஜைனப் சொந்த மருமகள் இல்லை, அப்படியானால் அவர் யார்?. ஐயா சாமி, அவர் வேறு யாருமல்ல முகமதின் அத்தை மகள், அப்போ ஜைத்திற்கும் ஜைனபிற்கும் திருமணம் செய்து வைத்தது யார்?. யாரு மார்பழகில் மயங்கி மணமுடிக்க நாடியதாக நா கூசாமல் பொய் கூறமுடிகிறதே அந்த முகமது என்ற மாமனிதர்தான். அழகில் மயங்கியிருந்தால் அப்பவே கல்யாணம் கட்டியிருக்கலாம், அன்று முகமதிற்கு எந்தத்தடையும் இருக்கவில்லை.

சரி வளர்ப்புமகனின் மனைவியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்,அதற்க்காக அடுத்தவரின் மனைவியை விவாகரத்து செய்ய வைத்து ஏன் திருமணம் செய்ய வேண்டும்.

சுருக்கமாக...

ஜைனப் மற்றும் ஸைத் -ன் இல்லற வாழ்வில் இன்பமில்லை, இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு + ஜைனப் அவர்களின் மனதில் இருந்த தான் உயர்ந்த குலம் ஜைத் ஒரு அடிமை என்னும் எண்ணம் மேலும் விருப்பமில்லாமல் இறைக்கட்டளக்காக ஸைதுடனான திருமணத்திற்கு சம்மதம். மேலும், ஸைத்(ரலி) அவர்கள் முன்கோபியாக இருந்தது இவையனைத்தும் இவர்களின் மன வாழ்க்கை கசப்பதற்க்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்தன, இது இவர்களின் விவாவகரத்திற்கு வழிகோலியது

தான் செய்து வைத்த ஒரு திருமணம் இவ்வாறு ஆகிவிட்டதே என்னும் கவலை முகமது (ஸல்) அவர்களை மிகவும் பாதித்து, முகமது (ஸல்) இதன் காரணமாக மன வேதனைக்கு ஆளாகிறார்கள் இது மட்டும் காரணமன்று, இறைவன் பொய்யான உறவுமுறைகளைக் வேறோடு அகற்ற நாடியதும் இத்திருமணத்திற்கு காரணமாக அமைகிறது. அரபிகளின் பழக்க வழக்கங்களில் ஒன்றானது மகனுடன் தந்தையின் பெயரை சேர்த்து அழைப்பதாகும். உதாரணத்திற்கு தந்தை பெயர் அப்துல்லாஹ், மகனின் பெயர் முகமது என்று வைத்துக் கொள்ளுங்கள் அரபு வழக்கப்படி முகமது இப்னு அப்துல்லா என்று அழைக்கப்படும். அதே போல் ஜைத் அவர்கள் முகமது நபியின் வளர்ப்பு மகனாக இருந்த போதிலும் ஜைத் அவர்கள் ஜைத் இப்னு முகமது என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள், வளர்ப்பு மகன் வளர்ப்பு மகன் தான், சொந்த மகன் இல்லை என்னும் கருத்தை ஆழமாக நிலை நிறுத்த அன்றய கால கட்டத்தில் இந்தத் திருமணம் அவசியமான ஒன்றாகவே இருந்தது, இத் திருமணம் சம்பந்தமாக உள்ள இறை வசனங்களை வைத்துப் பார்க்கும் பொழுது முகமது நபி அவர்கள் விருப்பமின்றி இறைக் கட்டளை நிமித்தம் இத்திருமணத்தை செய்துள்ளார்கள் என்பதும் இத்திருமணத்திற்கு காமம் காரணமில்லை என்பதும் கீழ் காணும் இறை வசனத்தின் மூலம் விளங்கும்.

''உம் மனைவியைத் தலாக் கூறாது தடுத்துக் கொள்! என்று கூறினீர், அல்லாஹ் வெளிப்படுத்துக் கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர்! அல்லாஹ்வே நீர் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன்''. (அல்குர்ஆன் 33:37)